திருச்சி பெல் நிறுவனத்தில் 596 பணியிடங்கள்; ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திருச்சி பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 596 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 155

Civil Engineering - 20

Computer Science Engineering/ Information Technology - 10

Electrical & Electronics Engineering - 5

Electronics & Communication Engineering - 5

Mechanical Engineering - 95

கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accountant - 10

கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் B.Com படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant-HR - 10

கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

Technician (Diploma) Apprentices

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 11

Civil Engineering - 1

Electrical & Electronics Engineering - 1

Electronics & Communication Engineering - 1

Mechanical - 8

கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 8,000

Trade (ITI) Apprentices

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 430

AC Mechanic - 7

Electrician - 40

Fitter - 180

Instrument Mechanic - 10

Machinist - 30

Motor Mechanic - 10

Turner - 20

Welder - 120

COPA - 13

கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

உதவித் தொகை: 7,700 - 8,050

வயது தகுதி: 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் https://trichy.bhel.com/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://trichy.bhel.com/ என்ற இணையதள பக்கங்களைப் பார்வையிடவும்.
Previous Post Next Post