தினமும் 6 கிராம் வெந்தயம்... சுகர் பேஷன்ட்ஸ் எப்படி சாப்பிடுவது? மருத்துவர் சிவபிரகாஷ்


வெந்தயம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்குமா என்ற கேள்வி பலருக்கு உள்ளது. அவ்வாறு சாப்பிட வேண்டுமானால் எவ்வளவு வெந்தயம் எடுத்துக் கொள்ள வேண்டும்?


யாரெல்லாம் வெந்தயம் சாப்பிடலாம் போன்ற பல கேள்விகளுக்கு மருத்துவர் சிவபிரகாஷ் பதிலளித்துள்ளார். அவர் தனது விளக்கத்தை 4 பகுதிகளாக பிரித்துள்ளார்.

1. ஆராய்ச்சிகள் கூறுவது என்ன?

இயற்கை உணவுகள் மூலம் சர்க்கரையை நோயை கட்டுப்படுத்த முடியுமா என சில ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதிகப்படியான மக்கள் இல்லாமல், சிறிய குழுக்களாக பிரித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் தகவல்களை மட்டுமே தற்போது அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, வெந்தயம் மற்றும் ஆப்பிள் சிடார் வினிகர் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடிவும் என சில ஆய்வு முடிவு கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார். வெந்தயத்தை சரியாக எடுத்துக் கொண்டால் 0.8 சதவீதம் வரை சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மருத்துவர் சிவபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

2. எவ்வாறு சர்க்கரையை குறைக்கும் வேலையை வெந்தயம் செய்கிறது?

வெந்தயம் செரிமானத்தை தாமதமாக்குவதற்கு உதவி செய்வதாக சிவபிரகாஷ் தெரிவித்துள்ளார். வயிற்றில் இருக்கும் உணவு குடலுக்கு செல்லும் வேகத்தை வெந்தயம் கட்டுப்படுத்துவதாகவும், இதனால் நீண்ட நேரம் உணவு வயிற்றில் இருப்பதால் சர்க்கரை சிறிது, சிறிதாக வெளியேறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3. எவ்வளவு சாப்பிட வேண்டும்?

ஒரு நாளுக்கு 6 கிராம் வரை வெந்தயத்தை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் சிவபிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, ஒரு வேளை உணவில் 2 கிராம் வரை வெந்தயம் எடுத்துக் கொள்ளலாமென அவர் தெரிவித்துள்ளார்.

4. யாரெல்லாம் இதை பின்பற்றலாம்?

சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் இதனை பிரதானமாக எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைப் 1, டைப் 2 டையபட்டீஸ் இருப்பவர்கள் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொண்டாலும், அதனை பிரதானமான மருந்தாக எடுத்து, தாங்கள் வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை கைவிடக் கூடாது என மருத்துவர் சிவபிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post