![](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/700x393_90/fetchdata20/images/38/72/4e/38724e2e13619fbc924ed50d0552548fdaf7214abe822e81dcbd4df8bd99aee0.webp)
தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி மற்றும் பொங்கல் பரிசுகள் பெற ரேஷன் கார்டு கட்டாய ஆவணமாக இருந்து வருகின்றது.
இதனால் மக்கள் புதிய ரேஷன் கார்டுகளுக்காக அதிக அளவில் விண்ணப்பிக்கின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பரிசுகள் அனைத்தையும் பெற, குடும்பங்களுக்கு உரிய ரேஷன் கார்டு அவசியம். இதனால் மக்கள் தங்கள் புதிய ரேஷன் கார்டுகளுக்காக அரசு இணையதளம் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சுமார் 3 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்விண்ணப்பங்களில் 1.5 லட்சம் பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும்.
பொதுமக்கள் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். சரியான ஆவணங்களை சேர்த்து விண்ணப்பம் செய்தால், 15 நாட்களில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும்.
Tags:
பொதுச் செய்திகள்