"சுரைக்காய்க்கு உப்பு இல்லை" - இதன் அர்த்தம் என்ன தெரியுமா ?




"சுரைக்காய்க்கு உப்பு இல்லை" என்று சொல்கிறார்கள்.இதன் அர்த்தம் என்ன?.

பதில் : சுரக்காய் சாப்பிட்டால் உடலிலுள்ள கெட்ட உப்புக்களை சிறுநீரகம் வழியாக வெளியே கொண்டுவந்துவிடும்.

எனவே சுரக்காய் சாப்பிட்டால் உடலில் கெட்ட உப்புக்கள் இருக்காது என்பததைத்தான் நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

சுரைக்காயில் உடலை கிடைக்கக் கூடிய எந்த விதமான உப்புகளும் இல்லை என்பதை தான் அப்படி குறிப்பிடுகிறார்கள். மேலும், இந்த சுரைக்காயை நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகத்தின் வழியே உடலில் இருக்கும் அனைத்து தீய உப்புக்களும் வெளியேறிவிடும். இதற்காகத்தான் இப்படி ஒரு சொற்றொடர் உருவாகி இருக்கிறது.

எனவே சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் ,யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படும் சிறுநீரக கிருமித் தொற்று உள்ளவர்கள், அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள், கிரியேட்டினின் எனப்படும் உப்பு அதிகமாக வெளியேறுபவர்கள் , சிறுநீர் வழியாக புரோட்டின் வெளியேறுபவர்கள், மொத்தத்தில் சிறு நீரக சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் சுரக்காய் ஒரு அருமையான மருந்து.

எனவே சுரைக்காயை பச்சையாகவோ, வேக வைத்து ,பொரியல் செய்தோ, அவியல் செய்தோ சாம்பாரில் பயன்படுத்தியோ அல்லது சூப் வடிவத்திலோ தொடர்ந்து சாப்பிட்டு வருவது சிறுநீரக கோளாறு உள்ள அனைவருக்கும் மிகவும் நல்லது.

எனவே சுரக்காய் சாப்பிடுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்.
Previous Post Next Post