நாட்டிலேயே முதன் முறையாக பெங்களுரில் பறக்கும் டாக்ஸி திட்டம்..


இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்களின் பெருக்கத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்வதற்கு மணிக்கணக்கில் கால தாமதம் ஆகிறது.

சென்னை, டெல்லி, மும்பை, கல்கத்தா, பெங்களுரு, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் தினசரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி அல்லல் படுவது தொடர்கதையாகி வருகிறது.

மெட்ரோ ரயில் திட்டங்கள் கணிசமான அளவு போக்குவரத்து நெரிசலைக் குறைத்தாலும் நாள்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் பொதுப் போக்குவரத்திற்கு மாறும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்குக் கூட வழி கிடைக்காத சூழல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் அபாயங்களும் ஏற்படுகிறது. எனவே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பறக்கும் டாக்ஸி திட்டத்தினை பெங்களுருவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதற்கான திட்ட வரையறை தயராகி வருகிறது. அவசர காலங்களில் நேயாளிகளுக்கு டிரோன்கள் மூலம் மருந்துகள் வழங்கும் நிலை உள்ள நிலையில் தற்போது போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பறக்கும் டாக்ஸியில் இனி எளிதாக சில நிமிடங்களில் இலக்கினை அடையலாம்.

அந்த வகையில் பெங்களுரு எலட்க்ட்ரானிக் சிட்டியிலிருந்து விமான நிலையத்திற்கு இடைய உள்ள 53 கி.மீ தூரம் வரை பறக்கும் டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வெறும் 19 நிமிடங்களில் இலக்கினை அடையலாம் எனவும் இதற்கான கட்டணமாக ரூ. 1700 ஆக இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது. இதில் அதிகபட்சமாக 7 பேர் வரை பயணிக்கலாம்.

இந்தத் திட்டம் சாத்தியமாகும் நிலையில் இனி சாலை மார்க்கமாக பயணிக்கும் வசதி படைத்த மக்களுக்கு இது ஓர் வரப்பிரசாதமாக இருக்கும். மேலும் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவத்தினைக் கொடுப்பதால் மிடில் கிளாஸ் மக்களும் இதில் எளிதாக பயணம் செய்யலாம்.
Previous Post Next Post