இன்று பெரும்பாலும் 40 வயது கடந்து விட்டால் அனைவரும் சர்க்கரை நோய்க்கு ஆளாகி வருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நீரிழிவு நோயானது மிகவும் ஆபத்தாக கருதப்படுகிறது. இந்தியாவில் நீரிழிவு நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உள்ளார்கள். குறிப்பாக 20 முதல் 79 வயதிற்கு உட்பட்டவர்கள் நீரிழிவு நோய்க்கு அதிகம் ஆளாகி இருக்கிறார்கள். இதுவரை இந்தியாவில் மொத்தம் 74.9 மில்லியன் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. 2045 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 124.9 மில்லியன் ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் உள்ளது. சுமார் 40 மில்லியன் நபர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சூரன்ஸ் சார்ந்துள்ளனர். இந்நிலையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியை புதுமையான செல் தெரப்பி முறையில் முழுமையாக குணப்படுத்தி மருத்துவ உலகில் சாதனைப்படுத்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
ஷாங்காய் சாங்ஜெங் மருத்துவமனை, சீன அறிவியல் கழகத்தின் மாலிக்யூல் செல் சயின்ஸ் பிரிவின் சிறப்பு மையம் மற்றும் ரெஞ்சி மருத்துவமனை ஆகிய குழுவால் உருவாக்கப்பட்ட இந்த சிகிச்சை முறை செல் டிஸ்கவரி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
25 ஆண்டு காலப் போராட்டம்:
கடந்த 25 ஆண்டுகளாக டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 59 வயதான நோயாளி ஒருவர், இந்த நோயால் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வந்தார். 2017 ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த போதிலும் அவர் தனது கணைய செயல்பாட்டை இழந்தார்.
இது இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானதாகும். மேலும் இவர் நீரிழிவால் ஏற்படும் கோமாவை தடுக்க தினமும் பல இன்சுலின் ஊசிகளை எடுத்து வந்தார். மேலும் ஐலெட் செல்களின் அனைத்து செயல்பாட்டையும் கிட்டத்தட்ட அவர் இழந்துவிட்டார்.
இந்நிலையில் சௌத் சீனா மார்னிங் போஸ்டின் அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் ஒரு புதுமையான உயிரணு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 59 வயதான நோயாளி 2022 முதல் மருந்து இல்லாமல் இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறது.
சீன மருத்துவக் குழுவின் அபார சாதனை:
பல ஆண்டுகளாக இந்த நோய்க்கு தீர்வு காண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் சீன மருத்துவ குழு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை செய்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அந்த நோயாளி செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதன் பிறகு 11 வாரங்களுக்குள் அவர் இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்திக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்குள் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டு, வாய் வழியாக உட்கொள்ளப்பட்ட மருந்துகளின் அளவையும் படிப்படியாக குறைத்தார். இறுதியில் மொத்தமாக மருந்துகளை நிறுத்திக் கொண்டார்.
செல் மாற்று முறை என்பது புற இரத்த மோனோ நியூக்ளியர் செல்களை மீண்டும் வடிவமைத்து அவற்றை விதை செல்களாக மாற்றி செயற்கையான சூழலில் கணையத் திசுக்களை மீண்டும் உருவாக்குவதை அடிப்படையாக கொண்டது.
மேலும் இந்த சிகிச்சையின் தொடர் ஆய்வுகளில் பாதிக்கப்பட்ட நோயாளியின் கணையத் திசுக்கள் திறம்பட மீட்டெடுக்கப்பட்டுள்ளது என ஆய்வுக்குழுவின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான இன் (Yin) தெரிவித்துள்ளார். தற்பொழுது 33 மாதங்களாக அவர் எந்த ஒரு இன்சுலின் ஊசியும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறாய் என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் நீரிழிவு நோய்:
உலக மக்கள் தொகையில் 17.7% சீனா கொண்டு இருந்தாலும், நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உலகளவில் கால் பகுதியை கொண்டுள்ளது. இது அரசாங்கத்தின் மீது பெரிய சுகாதார சுமையை சுமத்துவதாக உலகளாவிய ஆரோக்கியத்திற்கான வெளிநாட்டு உறவு கவுன்சிலில் மூத்த அதிகாரி ஹுவாவ் யான்ஜோங் குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் சர்க்கரை நோய்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் உள்ளது. நாட்டில் 140 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சுமார் 40 மில்லியன் பேர் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை சார்ந்துள்ளனர்.
ஆனால் இந்த செல் மாற்று சிகிச்சை முறை மூலமாக நாள்பட்ட நோய் சுமையிலிருந்து நோயாளிகளை விடுவிக்கவும் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் மற்றும் சுகாதார செலவீனங்களை குறைக்கவும் முடியும்.
சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய செல் மாற்று சிகிச்சை முறை பல கோடி மக்களை காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
உடல் நலம்