நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவே மருந்தாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்கள். அதே போல, ஆங்கில மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கபப்டும் ஹிப்போகிரேட்ஸ், உணவு மருத்தாகவும் மருந்து உணவாகவும் இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.
ஆகவே, எல்லா வகை மருத்துவமும் பரிந்துரைப்பது உணவே மருந்தாக இருக்கட்டும் என்பதுதான்.
நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உணவுப் பொருட்களிலேயே உடல் ஆரோக்கியத்துக்கான தீர்வுகள் உள்ளன. தினசரி ஒரே ஒரு பூண்டு பல் இப்படி இந்த முறையில் சாப்பிட்டால் பி.பி முதல் மாரடைப்பு வரை தீர்வு உள்ளது என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுகிறார். தினசரி ஒரு பூண்டு பல் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.
டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன், வெள்ளைப் பூண்டின் நன்மைகள் குறித்துப் பேசியுள்ளார். அதில், தினசரி ஒரே ஒரு பூண்டு பல் சாப்பிடுவதன் நன்மைகளையும் அதே நேரத்தில், அளவுக்கு அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளையும் பற்றி கூறியுள்ளார்.
பூண்டுவை பச்சையாக சாப்பிடுவதுதான் ரொம்ப ரொம்ப நல்லது என்கிறார் டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன். தினமும் ஒரே ஒரு பூண்டு பல் எடுத்து, அதை நசுக்கி ஒரு 5 நிமிடம் காற்றோட்டமாக வையுங்கள். எதனால் என்றால், பூண்டுவை நசுக்கி காற்றோட்டமாக வைக்கும்போது, பூண்டுவில் இருக்கும் சில வேதிப் பொருட்கள், காற்றுடன் வினைபுரிந்து நல்ல வேதிப்பொருட்களாக மாறும். பிறகு, அதை எடுத்து, வாயில் போட்டு மென்னு, உமிழ்நீருடன் கலந்து சாப்பிடும்போது அதனுடைய முழு மருத்துவ குணமும் கிடைக்கும் என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுகிறார்.
இதனால், என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்றால், முதலில் இதயத்திற்கு நல்லது. பூண்டுவில் அலிசின் (Allicin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது நமது உடம்பில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இந்த நைட்ரிக் ஆக்சைடு நம்ம உடம்பில் இருக்கிற ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. அதனால், ரத்தக் கொதிப்பு என்கிற பி.பி இருக்கிறவர்களுக்கு கட்டுப்பாட்டுக்கு வரும். கூடவே, எல்.டி.எல் என்று சொல்லக்கூடிய கெட்டக் கொழுப்பை கம்மியாக்கும். அதனால், இதயத்தில் ரத்த நாள அடைப்பு வராமல் தடுக்கும். அதாவது மாரடைப்பு வராமல் தடுக்கும்.
இரண்டாவது இப்படி ஒரே ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், நம்முடைய குடலுக்கு நல்லது. நம்முடைய குடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. நாம் சாப்பிடுகிற சாப்பாடு செரிமானம் ஆவதில் இந்த நல்ல பாக்டீரியாக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் வளர்வதற்கு பிரி பயாட்டிக் என்கிற உணவுப் பொருட்கள் வேண்டும். அந்த பிரி பயாட்டிக் பொதுவாக வெங்காயம், தக்காளி, வாழைமரம், தயிர், பூண்டு ஆகியவற்றில் நிறைய உள்ளது. அதனால், நாம் தினமும் பூண்டு சேர்த்துக்கொண்டு வரும்போது, நம்முடைய ஜீரண மண்டலம் நன்றாகவே வேலை செய்யும். இதனால், செரிமானப் பிரச்னை வராமல் இருக்கும் என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுகிறார்.
மூன்றாவது, இந்த பூண்டு நமது மூளைக்கு ரொம்ப நல்லது. நமக்கு பல காரணங்களால் மன அழுத்தம் அதிகமாகிறது. கூடவே, புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், தவறான உணவுப்பழக்கத்தால் நம்முடைய உடலில் கழிவுகள் சேருகின்றன. இதனால், கேன்சர், டெம்னிஷியா, வயதான தோற்றம், நியூரோ டிஜெனரேட்டிவ் டிஸ்ஆர்டர் மாதிரி பல வியாதிகள் வரும். இந்த பூண்டுவில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி இன்ஃபிளேமேட்டரி இருக்கிறது. அதனால், நமது உடலில் கழிவுகள் சேர்வதைக் கம்மி பண்ணும். இதனால், நமது உடம்பில் உள்ள செல்களைப் பாதுகாக்கும். டிமென்ஷியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.
நான்காவது தினமும் பூண்டு சாப்பிடும்போது, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டுவில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, செரீனியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் நிறைய இருக்கிறது. இவை நம் உடலில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகப்படுத்தும். அதன் மூலமாக நமது உடலில் தொற்றுகள் உள்ளே வராமல் தடுக்கும். ஜலதோஷம், காய்ச்சல் இருக்கும்போது, பூண்டு ரசம் சாப்பிடும்போது எளிதாக சரியாகும்.
ஐந்தாவது, பூண்டு தினமும் சாப்பிடுபவர்களுக்கு, சர்க்கரை வியாதி இருந்தால் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் கம்மியாக இருக்கும். அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு காட்டுப்பாட்டுக்கு வரும். இதுமட்டுமில்லாமல், பூண்டு சாப்பிட்டால், ரத்தத்தை சுத்திகரிக்கும், உடல் எடையைக் குறைக்கும், ஆண்மைக்குறைவுப் பிரச்னையை சரி செய்யும், பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்கும் என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுகிறார்.
அதே நேரத்தில், இந்த பூண்டுவை அதிகமாக சாபிடுவதால் சில தீமைகளும் இருக்கிறது. பூண்டு அதிகபட்சமாக 4 அல்லது 5 பூண்டு பல் சாப்பிடலாம். அதுவே, தினமும் 10 - 15 பூண்டு பல் சாப்பிட்டால், ரத்தப்போக்கு அதிகரிக்கும், ரத்தம் உறைவதைத் தடுக்கும், அறுவை சிகிச்சை செய்தவர்கள், முதல் ஒரு வாரத்திற்கு பூண்டு நிறைய சாப்பிடக்கூடாது. அதே மாதிரி இந்த பிளட்கினஸ் மாத்திரை எடுப்பவர்கள் அதிகப்படியாக பூண்டு எடுத்துக்கொள்ளக்கூடாது. நிறைய பூண்டு சாப்பிட்டால், கல்லீரல் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நிறைய பூண்டு சாப்பிட்டால், கேஸ்ட்ரிக்ஸ் பிரச்னை, வயிற்றில் புன், அல்சர் வரும். அதே போல, கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பூண்டு அதிகம் சாப்பிடக்கூடாது. அதனால், அளவுக்கு மிஞ்சினால், அமுதமும் நஞ்சு என்பதால், தினசரி ஒரே ஒரு பல் பூண்டு மேற்கண்ட முறையில் சாப்பிட்டு வந்தால் நல்லது என்று டாக்டர் ஸகுல் ராமாநுஜ முகுந்தன் கூறுகிறார்.
Tags:
உடல் நலம்