கொரோனா தொற்றுக்கு பின் நான்காண்டுகளாக சரண்டர் லீவுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என அரசு ஊழியர்கள் குமுறினர்.அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் வழங்கப்படும் விடுப்பில் 15 நாட்களை ஈட்டிய விடுப்பாக (சரண்டர் லீவ்) சரண்டர் செய்து அரைமாத சம்பளமாக பெறலாம்.
ஆண்டுக்கு 15 நாட்கள் வீதம் தொடர்ந்து 240 நாட்கள் வரை சம்பளத்திற்காக லீவை சரண்டர் செய்யலாம். ஆண்டில் 30 நாட்கள் லீவு இருந்தாலும் 15 நாட்கள் மட்டுமே சரண்டர் செய்யும் வசதியுள்ளது. ஆண்டுதோறும் சரண்டர் லீவுக்கு சம்பளம் வாங்காவிட்டால் ஓய்வின் போது 240 நாட்கள் வரை சேமித்து வைத்திருந்தால் அதற்கு 8 மாத ஊதியம் தரப்படும். 240 நாட்களுக்கு மேல் லீவை சரண்டர் செய்ய முடியாது.
'கொரோனா தொற்றின் போது அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தோடு இதையும் சேர்த்து கொடுக்க முடியாது என அரசு நிறுத்தி வைத்தது தற்போது வரை தரவில்லை' என்கிறார் அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட தலைவர் நீதிராஜன். அவர் கூறியதாவது:2020 ஜன. 1ல் கொரோனா தொற்றை காரணம் காட்டி 2021 மார்ச் 31 வரை சரண்டர் லீவுக்கான சம்பளத்தை அரசு நிறுத்தி வைத்தது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்தது.
ஆட்சி பொறுப்பேற்ற பின் மறு உத்தரவு வரும் வரை சரண்டர் லீவுக்கான சம்பளத்தை நிறுத்தி வைக்கப்படுவதாக' அறிவித்தது.2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் கிடையாது. ஓய்வுக்கு பின் சி.பி.எஸ்., தொகை தான் கிடைக்கும். சி அண்ட் டி நிலை ஊழியர்கள் சி.பி.எஸ். பிடித்தம் போக குறைந்த சம்பளம் தான் வாங்குகிறோம்.
தீபாவளி போனஸ் ஆக ரூ.3000 தான் அரசு தருகிறது. எனவே பிள்ளைகளின் கல்விச் செலவுக்காகவும் (மே மாதம்) பண்டிகை செலவுக்காகவும் (அக்.,நவ.,) சரண்டர் லீவை ஒப்படைத்து சம்பளம் பெற்று வந்தோம். தற்போது இத்தொகை நிறுத்தப்பட்டதால் ஊழியர்கள் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டியுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் லீவுத்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.கொரோனா தொற்றுக்கு பின் நான்காண்டுகளாக சரண்டர் லீவுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என அரசு ஊழியர்கள் குமுறினர்.அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் வழங்கப்படும் விடுப்பில் 15 நாட்களை ஈட்டிய விடுப்பாக (சரண்டர் லீவ்) சரண்டர் செய்து அரைமாத சம்பளமாக பெறலாம்.
ஆண்டுக்கு 15 நாட்கள் வீதம் தொடர்ந்து 240 நாட்கள் வரை சம்பளத்திற்காக லீவை சரண்டர் செய்யலாம். ஆண்டில் 30 நாட்கள் லீவு இருந்தாலும் 15 நாட்கள் மட்டுமே சரண்டர் செய்யும் வசதியுள்ளது. ஆண்டுதோறும் சரண்டர் லீவுக்கு சம்பளம் வாங்காவிட்டால் ஓய்வின் போது 240 நாட்கள் வரை சேமித்து வைத்திருந்தால் அதற்கு 8 மாத ஊதியம் தரப்படும். 240 நாட்களுக்கு மேல் லீவை சரண்டர் செய்ய முடியாது.
'கொரோனா தொற்றின் போது அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தோடு இதையும் சேர்த்து கொடுக்க முடியாது என அரசு நிறுத்தி வைத்தது தற்போது வரை தரவில்லை' என்கிறார் அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட தலைவர் நீதிராஜன். அவர் கூறியதாவது:2020 ஜன. 1ல் கொரோனா தொற்றை காரணம் காட்டி 2021 மார்ச் 31 வரை சரண்டர் லீவுக்கான சம்பளத்தை அரசு நிறுத்தி வைத்தது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்தது.
ஆட்சி பொறுப்பேற்ற பின் மறு உத்தரவு வரும் வரை சரண்டர் லீவுக்கான சம்பளத்தை நிறுத்தி வைக்கப்படுவதாக' அறிவித்தது.2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் கிடையாது. ஓய்வுக்கு பின் சி.பி.எஸ்., தொகை தான் கிடைக்கும். சி அண்ட் டி நிலை ஊழியர்கள் சி.பி.எஸ். பிடித்தம் போக குறைந்த சம்பளம் தான் வாங்குகிறோம்.
தீபாவளி போனஸ் ஆக ரூ.3000 தான் அரசு தருகிறது. எனவே பிள்ளைகளின் கல்விச் செலவுக்காகவும் (மே மாதம்) பண்டிகை செலவுக்காகவும் (அக்.,நவ.,) சரண்டர் லீவை ஒப்படைத்து சம்பளம் பெற்று வந்தோம். தற்போது இத்தொகை நிறுத்தப்பட்டதால் ஊழியர்கள் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டியுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் லீவுத்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
Tags:
பொதுச் செய்திகள்