அனைத்து அரசு ஊழியர்களும் பணியின்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்ககும், தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் அரசு ஊழியர்கள் அலுவலக நேரத்தில் புகைப்பட அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் புகைப்பட அடையாள அட்டையை தவறாமல் அணிய துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்த வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், புகைப்பட அடையாள அட்டை அணியாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்