தற்பொழுது மழைக்காலம் என்பதால் சளி,இருமல் பாதிப்பால் அவதியடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த சளி,இருமலை மருந்து மாத்திரையின்றி குணமாக்கும் அற்புத நாட்டு வைத்தியம் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
1)கற்பூரவல்லி இலை
2)டீ தூள்
3)தேன்
பயன்படுத்தும் முறை:
முதலில் நான்கு அல்லது இந்து கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
இந்த இலையை வைத்து சளி இருமலை விரட்டும் மூலிகை டீ தயாரிக்க வேண்டும்.அதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.பிறகு நறுக்கிய கற்பூரவல்லி இலையை போட்டு கொதிக்கவிடவும்,
அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி டீ தூள் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.இந்த டீயை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்கவும்.
தினமும் இருவேளை என்று மூன்று தினங்கள் இந்த மூலிகை குடித்து வந்தால் சளி,இருமல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)வெற்றிலை
2)துளசி
3)தேன்
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் 10 முதல் 15 துளசி இலைகளை தண்ணீர் போட்டு அலசி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.பிறகு இதையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெற்றிலை மற்றும் துளசி இலைகளை போட்டு கொதிக்க வைக்கவும்.
அதன் பின்னர் இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடித்தால் சளி,இருமல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.
Tags:
உடல் நலம்