வெளிநாட்டில் இருக்கும் போது பாஸ்போர்ட் தொலைந்து விட்டால் என்ன செய்வது?

வெளிநாடுகளுக்கு பயணிக்க கண்டிப்பாக இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவை. ஒரு இந்திய குடிமகனாக உங்கள் அடையாளத்தையும் நேஷனலிட்டி என்ன என்பதையும் சரிபார்க்க கண்டிப்பாக பாஸ்போர்ட் தேவைப்படுகிறது.
அப்படிப்பட்ட பாஸ்போர்ட்டை மிகவும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போதே உங்களுடைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டால் என்ன செய்வது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். உங்கள் பயணத்தின் போது பாஸ்போர்ட் தொலைந்து விட்டால் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்: போலீசில் புகார் அளிக்கவும்: உங்கள் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதா அல்லது திருடப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளியுங்கள் அல்லது ஆன்லைனில் எஃப்ஐஆர் பதிவு செய்யுங்கள்.

உங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டால் கண்டிப்பாக புகார் அளிக்க வேண்டும். ஏனெனில் புதிய பாஸ்போர்ட் அல்லது எமர்ஜென்சி சர்டிபிகேட் பெற விண்ணப்பிக்கும் போது காவல்துறை அறிக்கையின் நகல் தேவைப்படும். அருகிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவும்: போலீசில் புகார் அளித்தவுடன் அடுத்தபடியாக அருகில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவும். பாஸ்போர்ட் இழப்பு உட்பட வெளிநாடுகளில் இந்திய குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கையாள இந்திய தூதரகங்கள் உள்ளன.

புதிய பாஸ்போர்ட் அல்லது அவசரகால புதிய பாஸ்போர்ட் அல்லது எமர்ஜென்சி சர்டிபிகேட்டைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு திரும்ப அனுமதிக்கும் தற்காலிக ஆவணத்தை பெறுவதற்கு இந்த செயல்முறை முக்கியம். மேலும் உங்களுக்கு இருக்கும் நேரத்தின் அடிப்படையில் புதிய பாஸ்போர்ட் அல்லது எமர்ஜென்சி சர்டிபிகேட் பெற விண்ணப்பிக்கலாம். புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தேர்வு செய்தால், அனைத்து செயல்முறையும் முடிந்து உங்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுவதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

எமர்ஜென்சி சர்டிபிகேட் (EC): புதிய பாஸ்போர்ட் பெற உங்களுக்கு நேரமில்லை என்றால் எமர்ஜென்சி சர்டிபிகேட் பெற விண்ணப்பிக்கலாம். இந்த தற்காலிக ஆவணம் புதிய பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவிற்கு திரும்ப உங்களை அனுமதிக்கும். இருப்பினும் இந்தியாவில் ஒரு முறை நீங்கள் எதிர்கால பயணத்திற்காக புதிய பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்றிருக்க வேண்டும். தூதரகத்தில் அல்லது ஆன்லைனில் உங்கள் விசாவிற்கு மீண்டும் விண்ணப்பிக்கவும்: உங்கள் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால், உங்கள் விசா அதனுடன் தொலைந்து போக வாய்ப்புள்ளது.

விசாவிற்கு மீண்டும் விண்ணப்பிக்க, உங்கள் விசாவை வழங்கிய நாட்டின் தூதரகத்திற்குச் செல்ல வேண்டும். தேவையான படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் உங்கள் விசா விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். இந்த செயல்முறைகளுக்கெல்லாம் சற்று தாமதமாகும் என்பது போல தோன்றினால்.. உங்கள் பயணத் திட்டத்தை மாற்றி அமைக்கவும்.

உங்கள் விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு முன் பதிவை மாற்றுவதற்கான அபராதங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். பயணக் காப்பீட்டைப் பயன்படுத்தவும்: பயணக் காப்பீடு அனைத்து விசாக்களுக்கும் கட்டாயமில்லை என்றாலும், பாஸ்போர்ட் இழப்பு போன்ற எதிர்பாராத சிக்கல்களைக் கையாளும் போது இது நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும். உங்கள் பயணத்திற்கு முன் நீங்கள் பயணக் காப்பீட்டை வாங்கியிருந்தால், சம்பவத்தைப் புகாரளிக்க உங்கள் காப்பீட்டு வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள். பல இன்சூரன்ஸ் பாலிசிகள் தொலைந்த பயண ஆவணங்களுடன் தொடர்புடைய செலவுகள், பாஸ்போர்ட் மற்றும் விசாவிற்கு மீண்டும் விண்ணப்பிப்பதற்கான செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்
Previous Post Next Post