மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வந்த நற்செய்தி!!


தமிழக அரசு செப்டம்பர் மாதம் 2023-ல் கலைஞர் மகளிர் உதவி திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.முதலில் ஒரு கோடி பயனாளர்களை இலக்காக கொண்டு இந்தத் திட்டம் வரையறுக்கப்பட்டது.

ஆனால் அரசு அறிவித்த பட்டியலில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருக்கின்றனர். அதன் பிறகு தகுதி வாய்ந்த அத்தனை பேருக்கும் மாதந்தோறும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

முதல் கட்டமாக 1,06,52,000 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது. இதில் நிராகரிக்கப்பட்டவர்களும் உண்டு அவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தது. 1 கோடியே 15 லட்சம் பயனாளர்கள் சேர்க்கப்பட்ட நிலையில் மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ள சிறப்பு திட்ட செயலக துறை கீழ் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமண விழாவில் இது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். 

கலைஞர் மகளிர் தேர்தல் நேரத்தில் நம் தலைவர் அறிவித்த திட்டம் இதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்கள். ஆனால் நம்முடைய தலைவர் அண்ணா பிறந்த நாளன்று அறிவித்து செயல்படுத்தினார். 

இதை தொடர்ந்து பேசிய அவர் விடுபட்ட சிலருக்கும் கலைஞர் உரிமை திட்டத்தின் கீழ் நிச்சயம் உரிமை தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
Previous Post Next Post