தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தாரர்களுக்கு மாநில அரசு அட்டகாசமான பரிசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வருகின்ற அக்டோபர் 31-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். புது துணி எடுப்பது, இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்வது என பல்வேறு வகைகளில் தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர்.
மக்கள் தயாராவது மட்டுமில்லாமல் அரசும் மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவதற்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மு.கஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ் தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்னும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பினை வெளியிடவில்லை.
அதேபோல மத்திய அரசு ஊழியர்களும் மாநில அரசு ஊழியர்களும் இரண்டாவது அகவிலைப்படி உயர்வுக்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கான அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு முன்னதாகவே மாநில அரசு தீபாவளி போனஸ் மற்றும் பரிசு அறிவிப்பு குறித்து வெளியிடும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் ஒப்புதல் வழங்கிய பின்னர் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும்.
அதேபோல தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு அசத்தலான பரிசினை அறிவித்துள்ளார்.
அதன்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மூடப்பட்டிருக்கும் அனைத்து ரேஷன் கடைகளும் தீபாவளிக்கு முன்னதாகவே திறக்கப்பட்டு மக்களுக்கான பரிசுப் பொருட்கள் முறையாக வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
Tags:
பொதுச் செய்திகள்