மாரடைப்பைத் தூண்டும் கெட்ட கொழுப்பை கரைக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க..




தற்போது நம்மைச் சுற்றி ஜங்க் உணவுகள் அதிகம் உள்ளன. இந்த ஜங்க் உணவுகள் அனைவரையும் அடிமையாக்கும் வகையில் நல்ல சுவையுடன் இருப்பது மட்டுமின்றி, இந்த உணவுகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளன.


இப்படியான கெட்ட கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை ஒருவர் தொடர்ந்து உட்கொள்ளும் போது, ஒரு கட்டத்தில் அந்த கொழுப்புக்கள் உடலால் ஜீரணிக்க முடியாமல் அப்படியே தங்கி உடல் பருமனை உண்டாக்கிவிடுகிறது.

இது தவிர இரத்தக்குழாய்களில் அந்த கொழுப்புக்கள் அப்படி படியத் தொடங்கிவிடுகிறது. இதன் விளைவாக இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்பட தொடங்கி, மாரடைப்பு ஏற்பட தூண்டிவிடும். அதுவும் சமீப காலமாக மாரடைப்பால் நிறைய பேர் மரணமடைந்து வருகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டுமானால், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

கீழே இரத்த குழாய்களில் உள்ள கெட்ட கொழுப்புக்களை அகற்றி, மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் சில சிவப்பு நிற உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகளை அடிக்கடி உட்கொண்டு வந்தால், இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கலாம்.

பீட்ரூட்

இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் தேங்காய் சுத்தமாக வைத்துக் கொள்ள பீட்ரூட் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் நைட்ரேட்டுகள் உள்ளன. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மேலும் பீட்ரூட்டில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை அழற்சி/வீக்கத்தைக் குறைக்க உதவி புரியும். எனவே இந்த பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இரத்த குழாய்களில் எவ்வித அடைப்புக்களும் ஏற்படாமல் இருக்கும்.

தக்காளி

தக்காளியில் உள்ள லைகோபைன் என்னும் சன்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதோடு, இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. அதுவும் தக்காளியை வேக வைத்து சாப்பிடும் போது, அதில் லைகோபைனின் செறிவு அதிகமாக இருக்கும். ஆகவே இரத்தக்குழாய் சுத்தமாக இருக்க வேண்டுமானால், தக்காளியை தினமும் உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

சிவப்பு குடைமிளகாய்

சிவப்பு குடைமிளகாய் ருசியானது மட்டுமின்றி, மிகவும் சத்தானதும் கூட. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை உடலினுள் உள்ள வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் சிவப்பு குடைமிளகாயில் உள்ள நார்ச்சத்து, கொலஸ்ட்ராலை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. எனவே மாரடைப்பு வராமல் இருக்க வேண்டுமானால், சிவப்பு குடைமிளகாயை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

ராஸ்ப்பெர்ரி

பெர்ரிப் பழங்களுள் ஒன்றான ராஸ்ப்பெர்ரியில் டயட்டரி நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. இவை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. கூடுதலாக இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், ப்ரீ ராடிக்கல்களால் எற்படும் சேதத்தைத் தடுக்கிறது. ஆகவே இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதென்று நினைப்பவர்கள் இந்த பழத்தை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.

தர்பூசணி

நீர்ச்சத்து அதிகம் நிறைந்த சிவப்பு நிற பழமான தர்பூசணி, இதயத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் இதில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது உடலில் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால் இந்த சிவப்பு நிற பழத்தை அடிக்ககடி வாங்கி சாப்பிடுங்கள்.
Previous Post Next Post