பொதுவாக கிராமத்து முதியோரின் ஆரோக்கியத்துக்கு பழைய சோறுதான் காரணம். இதில் நம்முடலுக்கு நிறைய நன்மைகள் அடங்கியுள்ளது அது அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.அரிசி சாதத்தில் இரவில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு காலையில் சாப்பிட்டால் அதன் பெயர் பழைய சோறு .இதன் மூலம் ஏராளமான சத்துக்கள் கிடைப்பதோடு, உடலும் குளிர்ச்சியாகும்.
2.இந்த பழைய சோத்துக்குள் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருபதால் நமக்கு நிறைய நன்மைகள் உண்டு .
3.சிலருக்கு வயிறு பிரச்சினையிருக்கும் .காலையில் பழைய சோறு சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; மேலும் உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
4.சிலருக்கு நாள் பட்ட மலசிக்கல் இருக்கும் .இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும்.
5.சிலர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து சாப்பிடுவர் .அவர்கள் இந்த சோறு சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராகும்;
6.சிலர் எப்போதும் களைப்பாக இருப்பர் ,அவர்கள் இந்த சோறு சாப்பிட முழு நாளைக்கும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும்.
7. சிலருக்கு அலர்ஜி தொல்லை இருக்கும் ,இந்த ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.
8. சிலருக்கு அல்சர் தொல்லையிருக்கும் .அந்த எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.
Tags:
உடல் நலம்